ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்

கேரள முஸ்லிம் லீக் தலைவராக விளங்கிய பூங்கோயா தங்களுக்குப் பின் தலைவராக பொறுப்பேற்று 31 ஆண்டுகள் தாய்ச் சபையின் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு கேரள மாநிலத்தில் இந்திய யூனியன் முஸ்லிம் லீகை பலம் வாய்ந்த பேரியக்கமாகவும்,அகில இந்திய அளவில் தாய்ச் சபையை வெளிக்கொணரும் வகையில் மத்திய அரசிலும் பங்கு பெற வைத்த பெருமை சையத் முஹம்மத் அலி ஷிஹாப் தங்கள் அவர்களுக்கு உண்டு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் அகில இந்திய பொன் விழா மாநாடு சென்னையில் நடைபெற்ற பொழுது,தலமையேற்று ,விருதுகள் வழங்கி சிறப்பு சேர்த்ததை யாராலும் மறக்க முடியாது.தமிழகத்தில் நடைபெறும் எந்த நிகழ்வானாலும் அதில் ஷிஹாப் தங்கள் அவர்களின் பங்கேற்ப்பு கண்டிப்பாக இருக்கும்.
இன்று தமிழ் நாடு மாநில இந்திய யூனியன் முஸ்லிம் லீகின் தலமை அலுவலகமாக,கம்பீரமாக காட்சியளிக்கும் காயிதேமில்லத் மன்ஸிலை திறந்து வைத்த பெறுமையும் ஷிஹாப் தங்களுக்கு உண்டு!
 
காயிதேமில்லத் ,சிராஜுல் மில்லத் பொன்ற தலைவர்களிடம் பழகியது போலவே இன்றைய தலைவர் முனீருல் மில்லத்துடனும் மிகுந்த பாசம் வைத்திருந்தார்.
 
ஆக தமிழக முஸ்லிம் லீகின் வரலாற்றோடும் பின்னிப் பிணைந்திருந்த ஷிஹாப் தங்கள் அவர்களின் இழப்பு ஈடு செய்ய முடியாததாகும்,இருந்தாலும் இறைவனின் அழைப்பை ஏற்று சென்று விட்ட அனாரின் மறுமை வாழ்வு சிறக்கவும்,அவரை இழந்து வாடும் முஸ்லிம் லீக் குடும்பத்தினருக்கும்,கேரள சகோதரர்களுக்கும், TMCA சார்பில் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம்.